தமிழகத்தில் 30 வாக்குச்சாவடிகளில் 31 ஆம் தேதிக்குள் மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் 30 வாக்குச்சாவடிகளில் 31 ஆம் தேதிக்குள் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 30 வாக்குச்சாவடிகளில் 31 ஆம் தேதிக்குள் மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 27 ஆம் தேதி பல்வேறு ஊராட்சிகளில் முதல் கட்டத் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் வாக்குப் பதிவின் போது சில வாக்குச் சாவடிகளில் குளறுபடி நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. வேட்பாளர்களுக்கு சின்னங்களை மாற்றி வழங்கியது, வாக்குச் சீட்டுகளில் சின்னம் மாற்றி அச்சானது உள்ளிட்ட காரணங்களால் வாக்குப்பதிவின் போது சில பகுதிகளில் குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து குளறுபடி நடந்த 30 வாக்குச்சாவடிகளில் வரும் 31 ஆம் தேதிக்குள் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாளை தமிழகம் முழுவதும் 158 ஊராட்சிகளில் இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் தர்மபுரி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள 30 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 முதல் 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த பகுதிகளில் காவல்துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com