விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல், கம்பு விதைகள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல், கம்பு விதைகள் வழங்கப்படுவதாக தியாகதுருகம் வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளுக்கு மானிய விலையில் நெல், கம்பு விதைகள்
Published on

ஆடி பட்டத்தில் விவசாயிகள் நாற்று நட தங்களது நிலங்களை உழவு செய்து தயார் செய்து வருகின்றனர். இந்த பட்டத்திற்கு தேவையான 135 நாள் வயதுடைய நெல் ரகங்களான மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி சுமார் 22 டன், ஏ.டி.டி.45 சுமார் 6 டன், கோ 51 சுமார் 13 டன் மற்றும் பாரம்பரிய ரகங்களான தூய மல்லி, செங்கல்பட்டு சிறுமனி, பூங்கார் ஆகிய நெல் ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் ரகங்களை விதை கிராம திட்டத்தின் கீழ் மானிய விலையில் விவசாயிகள் பெற்று கொள்ளலாம். மேலும் இதர இடுபொருட்களான திரவ உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மானிய விலையில் விற்பனைக்கு தயாராக உள்ளது. இதேபோல் மானாவாரியில் கம்பு பயிரிடும் விவசாயிகளுக்கு தேவைப்படும் தனசக்தி கம்பு விதைகள் 550 கிலோ இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே நெல், கம்பு விதைகள், இடுபொருட்கள் தேவைப்படும் தியாகதுருகம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு மானிய விலையில் பெற்று ஆடி பட்டத்தில் விதைப்பு செய்து பயனடையலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com