3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

திருமங்கலம்,

திருமங்கலம் பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி பட்டைதீட்டி அதிக விலைக்கு விற்பனை செய்வதாக திருமங்கலம் வட்டாட்சியர் சிவராமனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் சோதனை மேற்கொண்டபோது திருமங்கலம் அருகே உள்ள கீழக்கோட்டை பகுதியில் ரைஸ் மில்லில் 50 கிலோ கொண்ட 59 மூடைகளில் 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ரேஷன் அரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மதுரை காமராஜர் சாலை பகுதியை சேர்ந்த செந்தில்முருகன் (வயது 47) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com