திருவாரூரில் வறட்சியால் வாடும் நெற்பயிர்கள்

நீர் வழித்தடங்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வறட்சி
Published on: 

திருவாரூர்,

போதிய நீர் இல்லாமல் நெற்பயிர்கள் வறட்சியால் வாடுகின்றன.

வாடிய பயிர்கள்

திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி விவசாயிகள் நேரடி நெல்விதை உள்ளிட்ட நெல்சாகுபடியில் ஈடுபட்டனர். ஆனால், நீர் வழித்தடங்கள் முழுமையாக தூர்வாரப்படாததால் திறந்து விடப்பட்ட தண்ணீர் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

போதிய தண்ணீர் திறக்கப்படாததாலும் திருவாரூர், மன்னார்குடி, கோட்டூர், வடபாதி மங்களம், பெருக வாழ்ந்தான் உள்ளிட்ட இடங்களில் இளம் நெற்பயிர்கள் நீரின்றி வாடி வருகின்றன. ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள தங்களுக்கு உடனடியாகத் தங்கு தடையின்றித் தண்ணீர் திறந்து விடவும், நீர் வழித்தடங்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விவசாயிகள் விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com