நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சங்கிலி மேலாண்மை திட்டம்: தனியார் அரவை ஆலைகள் விருப்ப கடிதம் கொடுக்கலாம் கலெக்டர் தகவல்

Published on

நாமக்கல், மே.27-

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் சேகரிப்பது முதல் நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் அரிசியை ஒப்படைப்பது வரையிலான வினியோக சங்கிலி மேலாண்மை திட்டத்தில் வாணிப கழக அரவை முகவர்கள் மற்றும் இதுவரை இணையாத தனியார் அரவை ஆலைகளை ஈடுபடுத்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது.

எனவே இதில் ஆர்வமுடைய தனியார் அரவை ஆலைகள் தங்களது விருப்ப கடிதத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com