தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்

தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
Published on

கடத்தூர்

கோபி நகராட்சி சார்பில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு வாரம் கடந்த 5-ந் தேதி தொடங்கி நாளை (வியாழக்கிழமை) வரை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

கோபி நகராட்சி தலைவர் என்.ஆர்.நாகராஜ் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பயன்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பதாகைகளை ஊர்வலத்தில் சென்றவர்கள் கைகளில் ஏந்தி சென்றனர். மேலும் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய ஆட்டோவும் ஊர்வலத்தில் சென்றது. நகராட்சி துப்புரவு அலுவலர் சோழராஜ், ஆய்வாளர்கள் சவுந்தரராஜன், நிருபன் சக்கரவர்த்தி உள்பட பலர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com