வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதன் எதிரொலியாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
Published on

கடலூர்:

கடந்த சில தினங்களுக்கு முன்பு தெற்கு அந்தமான் வங்க கடல் பகுதியில் ஓர் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது. அந்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

இந்நிலையில் புதிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில், இதற்கு அசானி புயல் என பெயர் வைக்கப்படும். இந்த அசானி புயல் மேலும் வலுவடைந்து, வருகிற 10-ம் தேதி அன்று,வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக வருகிற 10-ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களை கனமழை இருக்கக்கூடும் எதிர்பார்க்கப்படுவதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது. 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com