அதிகரிக்கும் கொரோனா: ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு..!

கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
அதிகரிக்கும் கொரோனா: ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு..!
Published on

சென்னை,

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 100 படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் செந்தில்குமார் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

லேசான அறிகுறிகள் இருந்தால் பாரசிட்டாமல், சிங்க், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கி தனிமைப்படுத்த வேண்டும் என்றும் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் ஆக்சிஜன் அளவை ஆக்சி மீட்டர் மூலம் பரிசோதிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் வீட்டு தனிமையில் உள்ளவர்களை தொலைபேசி மூலம் தினசரி கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com