

சென்னை,
பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்,
தமிழகத்தில் பருத்தி, நூல் விலை உயர்வால் ஜவுளித்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலை உயர்வால் தமிழக ஜவுளித்தொழில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொள்ள வேண்டும். பருத்தி, நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதி உள்ளார்.
தமிழகத்தில் பின்னலாடை நிறுவனங்கள் 2 நாள் ஸ்டிரைக்கை தொடங்கி உள்ள நிலையில் முதல்-அமைச்சர் கடிதம் எழுதி உள்ளார்.