சாலையில் விழுந்த மரத்தால் விபத்து அபாயம்

கிணத்துக்கடவு அருக சாலையில் விழுந்த மரத்தால் விபத்து அபாயம் நிலவுகிறது
சாலையில் விழுந்த மரத்தால் விபத்து அபாயம்
Published on

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து வருகின்றன. அந்த வகையில் வடபுதூரில் இருந்து கல்லாபுரம் செல்லும் வழியில் மாம்பள்ளி பிரிவு பகுதியில் கொன்றை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றிவிட்டனர். ஆனால் முழுமையாக மரம் அகற்றப்படவில்லை. இந்த சாலை வழியாக ஏழூர், மாம்பள்ளி, கல்லாபுரம், சிங்கையன்புதூர், வடபுதூர் உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. அவை சாலையில் விழுந்து கிடக்கும் மரத்தின் மீது மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மரத்தை முழுமையாக வெட்டி அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com