சமூக வலைதளங்களில் என் மகளை தவறாக சித்தரிக்கின்றனர் - ரிதன்யாவின் தந்தை புகார்


சமூக வலைதளங்களில் என் மகளை தவறாக சித்தரிக்கின்றனர் - ரிதன்யாவின் தந்தை புகார்
x

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யாவின் தந்தை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

சென்னை,

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான இரண்டரை மாதங்களில் புதுமணப்பெண் ரிதன்யா என்பவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சணை கேட்டு, உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக இறப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு ரிதன்யா ஆடியோ அனுப்பியிருந்தார். இதையடுத்து இந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்தநிலையில், ரிதன்யாவின் தந்தை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சந்தேக மரணம் என்று மட்டுமே பதிவு செய்துள்ளனர். குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். ரிதன்யாவுக்கு நடந்ததைப் போல வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. சமூக வலைதளங்களில் என் மகளை தவறாக சித்தரிக்கின்றனர், என் பெண்ணைப் பற்றி யாரும் தவறாக பேசாதீர்கள் என்று கண்ணீர் மல்க கூறினார்.

1 More update

Next Story