ரிதன்யா தற்கொலை வழக்கு: கைதான மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமீன்

ரிதன்யா தற்கொலை வழக்கில் அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் மூவருக்கும் சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
ரிதன்யா தற்கொலை வழக்கு: கைதான மூன்று பேருக்கும் நிபந்தனை ஜாமீன்
Published on

சென்னை,

திருப்பூ மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிபுதூரைச் சேந்தவா அண்ணாதுரை மகள் ரிதன்யா (27). இவா திருமணமாகி 78-ஆவது நாளில் வரதட்சணைக் கொடுமையால் ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டா. ரிதன்யா தற்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கணவா கவின்குமா, மாமனா ஈஸ்வரமூத்தி, மாமியா சித்ரா தேவி ஆகியோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இந்த நிலையில், கணவர், மாமனார், மாமியார் தங்களுக்கு ஜாமீன் கேட்டு   சென்னை ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்திருந்தனர்..இதனை விசாரித்த  ஐகோர்ட்டு, கணவர், கணவா கவின்குமா, மாமனா ஈஸ்வரமூத்தி, மாமியா சித்ரா தேவி ஆகியோருக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

அதன்படி மூவரும் காலை, மாலை போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முக்கிய சாட்சிகளிடம் விசாரணையும் முடிவடைந்து விட்டது என்பதால் மனுதாரர்களை சிறையில் வைத்திருக்க அவசியம் இல்லை எனக் கூறி மூவருக்கும் ஜாமீன் வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com