புனே அருகே ஆற்றுப்பாலம் இடிந்து விபத்து - நீரில் அடித்துச் செல்லப்பட்ட 20 பேரின் நிலை என்ன?


புனே அருகே ஆற்றுப்பாலம் இடிந்து விபத்து - நீரில் அடித்துச் செல்லப்பட்ட 20 பேரின் நிலை என்ன?
x
தினத்தந்தி 15 Jun 2025 4:57 PM IST (Updated: 15 Jun 2025 9:22 PM IST)
t-max-icont-min-icon

தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே அருகே அமைந்துள்ள மாவல் தாலுகாவிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இந்த நிலையில், இன்று அங்குள்ள டெகு பகுதியில் இந்திரயானி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நின்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து விழுந்தது.

இந்த சம்பவத்தின்போது பாலத்தின் மீது நின்று கொண்டிருந்த சுமார் 20 முதல் 25 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது வரை சுமார் 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மீதம் உள்ள சுமார் 20 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story