ஆர்.கே. நகரில் வாக்குப்பதிவு முடிந்தும் வாக்காளர்கள் கூட்டம் அலைமோதுகிறது

ஆர்.கே. நகரில் வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் வாக்காளர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
ஆர்.கே. நகரில் வாக்குப்பதிவு முடிந்தும் வாக்காளர்கள் கூட்டம் அலைமோதுகிறது
Published on

சென்னை,

காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாலை 5 மணிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவர்கள் ஓட்டுப்போட அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 74.5 சதவித வாக்குகள் பதிவாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆர்.கே. நகரில் வாக்குப்பதிவு முடிந்தும் வாக்காளர் கூட்டம் அலைமோதி வருகிறது. வாக்களிக்க 84 வாக்குச்சாவடிகளில் சுமார் 5,000 பேர் வரிசையில் காத்திருக்கிறார்கள். வாக்குப்பதிவு இரவு 8 மணிவரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com