

சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த தேர்தலில், ஆளும் அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தி.மு.க., பாரதீய ஜனதா உள்ளிட்ட பெரிய கட்சிகள் போட்டியிடுகின்றன. சுயேட்சை வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என புகார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, போலீசார் சிலரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.
இதேபோன்று ஆர்.கே. நகரில் வீடு ஒன்றில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என வந்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அங்கு சென்றுள்ளனர்.
அவர்கள் ஆர்.கே. நகரில் அமைந்த ஆர்.கே. நகர் காவல் நிலையம் எதிரே உள்ள வீடு ஒன்றில் சோதனை நடத்தி வருகின்றனர்.