ஆர்.கே. பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

ஆர்.கே. பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
ஆர்.கே. பேட்டை போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
Published on

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஈச்சம்பாடி காலனியை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 56). இவரது மகள் ஷாலினி (22). இவர் கடந்த 9-ந்தேதி முதல் மாயமானார் என்று அவரது தந்தை பரந்தாமன் பள்ளிப்பட்டு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாலினியை தேடி வந்தனர். இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் சூர்யா (25) ஷாலினியுடன் ஆர்.கே. பேட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராஜு முன்னிலையில் நேற்று தஞ்சம் அடைந்தார்.

தங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் திருப்பதி கங்கையம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து இரு வீட்டார் பெற்றோர்களையும் போலீசார் அங்கு வரவழைத்தனர். அவர்கள் முன்னிலையில் காதலர்களிடம் விசாரணை நடந்தது. காதலன் சூர்யாவுடன் செல்ல விரும்புவதாக ஷாலினி தெரிவித்தார் இதைத் தொடர்ந்து சூர்யாவுடன் ஷாலினியை போலீசார் அனுப்பி வைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com