ஆர்.எம்.வீரப்பன் 94-வது பிறந்தநாள் விழா

ஆர்.எம்.வீரப்பன் நேற்று தனது 94-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து கூறினார்.
ஆர்.எம்.வீரப்பன் 94-வது பிறந்தநாள் விழா
Published on

சென்னை,

எம்.ஜி.ஆர். கழகம் மற்றும் சென்னை கம்பன் கழகத்தின் தலைவர் ஆர்.எம்.வீரப்பனுக்கு நேற்று 94-வது பிறந்தநாள் ஆகும். இதையொட்டி அவர் சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் தனது பெற்றோரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து ஆர்.எம்.வீரப்பனுக்கும், மனைவி ராஜம்மாளுக்கும் மாலை அணிவித்து மகன்கள் வீ.செல்வம், வீ.தங்கராஜ் மற்றும் குடும்பத்தினர் வாழ்த்துகளை தெரிவித்து, அவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

ஆர்.எம்.வீரப்பன் இல்லத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து கூறினார். அவருடன் தி.மு.க. எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், ஆர்.எஸ்.பாரதி, மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் ஆகியோரும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பட அதிபர் ஏ.வி.எம்.சரவணன், இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், குகநாதன், எழுத்தாளர் மணிமேகலை கண்ணன், சாரதா நம்பி ஆரூரான், தொழில் அதிபர் முரளி உள்பட முக்கிய பிரமுகர்களும் ஆர்.எம்.வீரப்பன் வீட்டுக்கு சென்று பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

எம்.ஜி.ஆர். கழகத்தை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும், சென்னை கம்பன் கழகத்தை சேர்ந்த நிர்வாகிகளும், உறுப்பினர்களும் வாழ்த்துகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com