

சென்னை
மூத்த தலைவரும் எம்.ஜி.ஆர். கழகத் தலைவரும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் இன்று தனது 95 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அரசியலில் மூத்த தலைவரான இவர், தி.மு.க. தலைவர்களுடனும் நட்பு பாராட்டி வருகிறார்.
இதையடுத்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆர்.எம்.வீரப்பனுக்கு மாலை அணிவித்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார். முதல்-அமைச்சருடன் அமைச்சர் பொன்முடி, எம்.பி.க்கள்,ஜெகத்ரட்சகன் , டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்களும் சென்றனர்.