சென்னை: சாலை விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு


சென்னை: சாலை விபத்தில் இளம்பெண் உயிரிழப்பு
x

விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை

சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் சிவரஞ்சனி. இவர் தனியார் வணிக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், சிவரஞ்சனி நேற்று இரவு பணி முடித்துவிட்டு சிவரஞ்சனி ஸ்கூட்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மாதவரம் மஞ்சம்பாக்கம் ரவுண்டானாவில் ஸ்கூட்டரில் சென்றபோது பின்னால் வந்த டேங்கர் லாரி சிவரஞ்சனி மீது மோதியது. இதில் லாரி டையர் ஏறியதில் சிவரஞ்சனி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், சிவரஞ்சனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

1 More update

Next Story