கூலித்தொழிலாளி சாவு

வலங்கைமான் அருகே ரோடு ரோலர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கூலித்தொழிலாளி இறந்தார்.
கூலித்தொழிலாளி சாவு
Published on

வலங்கைமான்;

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள, இனாம் கிளியூர் காந்திநகரை சேர்ந்தவா முருகானந்தம்(வயது50). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று மாலை இவர் பாபநாசத்தில் இருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றா. அப்போது சாலையின் இடதுபுறத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரோடு ரோலர் மீது முருகானந்தம் ஓட்டி வந்த மோட்டா சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த முருகானந்தம் தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி முருகானந்தம் நேற்று அதிகாலை இறந்தார். இது குறித்து வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com