திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்து : 4 பேர் பரிதாப பலி

திருத்துறைப்பூண்டி அருகே ஆம்னி வேனும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
திருத்துறைப்பூண்டி அருகே சாலை விபத்து : 4 பேர் பரிதாப பலி
Published on

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாண்டி என்ற பகுதியில் ஆம்னி வேனும், அரசு பஸ்சும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்து சம்பவத்தில் சிக்கி, கேரளாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு ஆம்னி வேனில் பயணித்த 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com