தி.மு.க.வினர் சாலை மறியல்

வேலூரில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தி.மு.க.வினர் சாலை மறியல்
Published on

தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாகனம் மீது பா.ஜ.க.வினர் காலணிகளை வீசியதை கண்டித்து வேலூர் கிரீன் சர்க்கிளில் தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மாவட்ட அமைப்பாளர் ராஜாகுப்பம் முருகானந்தம் தலைமையில் நேற்று மாலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மறியலில் ஈடுபட்டவர்கள், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்யக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அவரின் உருவ படத்தை காலணியால் அடித்தும், தீ வைத்து எரித்தும் கண்டனத்தை தெரிவித்தனர். வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சுமார் 20 நிமிடங்களுக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com