சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.
சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்
Published on

கோவை

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் 75 பேரை போலீசார் கைது செய்தனர்.

மறியல் போராட்டம்

சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும், காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநக ரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு சத்துணவு- அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.

அந்த கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் வீரபத்திரன் தலைமை யில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கு அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சாமிகுணம் தொடங்கி வைத்து பேசினார். போராட்டத் தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து மாவட்ட செயலா ளர் வெங்கட சுப்பிரமணியன் பேசினார்.

இதில் ஏராளமான சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

மறியல் போராட்டத்தையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், சத்துணவு பணியாளர்கள் 75 பேரை கைது செய்தனர்.

வாகனத்தில் ஏற மறுப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றும்போது சிலர் ஏற மறுத்தனர். ஆனாலும் போலீசார் அந்த நபர்களை வலுக்கட்டாயமாக தூக்கி கைது செய்தனர்.

பின்னர் அவர்களை வாகனத்தில் ஏற்றி தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com