சாலை அமைக்கும் பணி

சேதுபாவாசத்திரம் அருகே மனோராவில் சாலை அமைக்கும் பணி நடந்தது.
சாலை அமைக்கும் பணி
Published on

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சியில் மனோரா சுற்றுலா தலம் செல்லும் மீனவர் குடியிருப்பு சாலை, முதல்-அமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. இ்ந்த பணிகளை

தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி, ஊராட்சி ஒன்றிய பொறியாளர் மணிமேகலை, ஊராட்சி மன்றத்தலைவர் ஜலீலா பேகம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com