சாலை பாதிப்புகளா..? புகார் தெரிவிக்க 'நம்ம சாலை' செயலி.. அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

நம்ம சாலை செயலியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சாலை பாதிப்புகளா..? புகார் தெரிவிக்க 'நம்ம சாலை' செயலி.. அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்
Published on

சென்னை, 

தமிழ்நாட்டில் இன்றும் பல சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றது. குறிப்பாக கிராமப்புறங்களில் சாலைகள் அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகின்றன.

இந்த நிலையில் பள்ளங்களற்ற சாலை மற்றும் பாதுகாப்பான சாலை என்ற நிலையை எட்ட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதில் சாலை புகார்களை உடனடியாக சரி செய்ய 'நம்ம சாலை செயலி' என்ற புதிய செயலி ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பள்ளங்களற்ற சாலை என்ற இலக்கை அடைய பொதுமக்களின் பங்களிப்பினை பெறுவதற்காக இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் சாலையில் உள்ள பள்ளங்களை அது தொடர்புடைய சாலையின் புகைப்படத்தை எடுத்து இந்த செயலியில் புகாராக பதிவேற்றம் செய்யவேண்டும். இந்த புகாரானது சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு மின் அஞ்சலாக அனுப்பப்படும். இந்த புகார் மூலம் சாலையை பொறியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டு சாலையில் உள்ள பள்ளத்த சரி செய்வார்கள். இந்த சரி செய்யப்பட்ட சாலையின் விவரங்களை புகைப்படத்துடன் இந்த செயலியில் அதிகாரிகள் பதிவேற்றம் செய்வார்கள். இந்த விவரங்கள் புகார் அளித்த நபரின் மொபைல் போனுக்கு அனுப்பப்படும்.

இதில் மாநில நெடுஞ்சாலைகள் என்றால் புகார் அளிக்கப்பட்ட 24 மணி நேரத்திலும் , மாவட்ட சாலைகள் என்றால் 72 மணி நேரத்திலும் சரிசெய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com