சேந்தமங்கலம் அருகேகுண்டும், குழியுமான நைனாமலை பெருமாள் கோவில் சாலைபக்தர்கள் அவதி

சேந்தமங்கலம் அருகேகுண்டும், குழியுமான நைனாமலை பெருமாள் கோவில் சாலைபக்தர்கள் அவதி
Published on

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே நைனாமலை பெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் பக்தரகள் அவதியடைந்து வருகின்றனர்.

நைனாமலை பெருமாள் கோவில்

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே மின்னாம்பள்ளி ஊராட்சியில் சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் வரலாற்று புகழ்வாய்ந்த நைனாமலை பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் உச்சியில் மூலவர் சன்னிதானம் உள்ளது.

தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி 3 வாரங்கள் முடிந்த நிலையில் 4-வது வார நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்கள் சேந்தமங்கலம்- புதன்சந்தை பிரதான சாலையில் இருந்து நைனாமலை கோவிலுக்கு பிரிந்து செல்லும் பாதையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் செல்லும் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

விபத்து அபாயம்

இந்த நிலையில் அங்கு இடநெருக்கடி ஏற்படும் பொழுது சிறு, சிறு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பக்தர்கள் நலன் கருதி அங்குள்ள குண்டும், குழியுமான சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

அத்துடன் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மலைப்பாதை அமைக்கும் பணி, விரைவாக நடைபெறாமல் அவ்வப்போது நிறுத்தி வைக்கப்பட்டு பிறகு பணி தொடர்வதால் காலதாமதம் ஆகி வருகிறது. மலைப் பாதை பணிகள் முடிந்து விட்டால் பக்தர்கள் பஸ்சில் செல்ல ஏதுவாக இருக்கும். சுமார் ரூ.13 கோடி செலவில் நடைபெற்று வரும் அந்த பணிகளில் மண்பாதை அமைக்கும் பணி மட்டும் தற்போது நடந்து வருகிறது

மொத்தமுள்ள 5 கி.மீட்டரில் இரண்டரை கிலோ மீட்டர் பணிகள் மட்டுமே முடிவடைந்து உள்ளது. மீதமுள்ள இரண்டரை கிலோ மீட்டர் பணிகளை விரைவாக முடிக்கவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com