சாலை ஆக்கிரமிப்பால் குடிநீர் வினியோக பணிகள் பாதிப்பு

சாலை ஆக்கிரமிப்பால் குடிநீர் வினியோக பணிகள் பாதிக்கப்படுவதாக கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
சாலை ஆக்கிரமிப்பால் குடிநீர் வினியோக பணிகள் பாதிப்பு
Published on

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், திண்டிவனம் தாலுகா இறையானூர் மேட்டுத்தெருவை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- இறையானூர் மேட்டுத்தெரு- வேந்தர் நகர் இணைப்பு சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக தனிநபர் ஒருவர், கழிவறை கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதுபோல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சூழலில் தற்போது இறையானூர் கிராமம் முழுவதும் ஊராட்சியின் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்பகுதியில் கழிவறை கட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் பொக்லைன் எந்திரம் மூலம் பைப்லைன் போட்டு குடிநீர் இணைப்பு வழங்க முடியாது என்று நிராகரித்து விட்டனர். எனவே பொது பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி குடிநீர் வினியோகம் செய்து தருமாறு அம்மனுவில் கூறியிருந்தனர். மனுவைப்பெற்ற மாவட்ட கலெக்டர் பழனி, அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com