வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் ரோடு ரோலர்- பஸ் மோதல்; 10 பேர் காயம்

வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் ரோடு ரோலர்- பஸ் மோதலில் 10 பேர் காயம் அடைந்தனர்.
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் ரோடு ரோலர்- பஸ் மோதல்; 10 பேர் காயம்
Published on

வண்டலூர்- வாலாஜாபாத் சாலையில் ஒரகடம் நோக்கி தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு 2 பஸ்கள் ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தது. படப்பை வஞ்சுவாஞ்சேரி அருகே சென்று கொண்டிருந்த போது தனியார் பஸ்கள் ஒன்றுக்கொன்று முந்தி செல்ல முயன்றன. அப்போது அதே சாலையில் பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த ரோடு ரோலர் மீது பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த 10 பேர் காயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்போது பின் தொடர்ந்து வந்த மற்றொரு பஸ் தடுப்புச்சுவரின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார் மற்றும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். இந்த விபத்து சம்பவத்தால் வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com