

தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் வேடசந்தூரில் ஆத்துமேட்டில் நேற்று நடைபெற்றது.பிரசாரத்தின்போது 12 போக்குவரத்து விதிமுறைகள் குறித்த நோட்டீசை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், போக்குவரத்து உதவி கோட்ட பொறியாளர் பொண்ணுவேல், உதவி பொறியாளர் கோபிநாத், வேடசந்தூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் சுப்பிரமணி, மகாலிங்கம் மற்றும் போலீசார், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.