தாரமங்கலத்தில் குடிநீர் கேட்டுகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

தாரமங்கலத்தில் குடிநீர் கேட்டுகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
Published on

தாரமங்கலம்

தாரமங்கலம் நகராட்சி 8, 9-வது வார்டு கைலாஷ் நகர், வேடப்பட்டி பிரிவு ரோடு, ஓமலூர் மெயின் ரோடு, அருணாசலம் புதூர் ஆகிய பகுதிகளில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் சரிவர செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், 8-வது வார்டு கவுன்சிலர் ஜெயந்தி தலைமையில் தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் செல்லும் பிரதான சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த தாரமங்கலம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் பொதுமக்கள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com