சாலையோர உணவு விற்பனை முறைப்படுத்தப்படும் - அமைச்சர் அருண்ராஜ் தகவல்

குழந்தைகளுக்கான தங்க மோதிரம் திட்டம் மூலம் அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவம் அதிகரிக்கும் என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
அமைச்சர் அருண்ராஜ்
Published on

சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் மாவட்ட அளவிலான உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கான ஆலோசனை கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின்னர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அசைவ உணவு விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பான முறையில் உணவு தயாரிப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, சேலம், கோவை, திருப்பூரில் ஆரோக்கியமான சுகாதாரமான உணவு' திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த 5 மாவட்டங்களில் சாலையோர உணவு விற்பனையை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தெருவோர உணவுக் கடை வைத்திருப்போர் தரமான, சுகாதாரமான உணவு தர வேண்டும் என்பதற்காக புதிய விஷயங்கள் முன்னெக்கப்பட்டுள்ளது.

உணவகப் பணியாளர்களுக்கு டைபாய்டு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளுக்கான தங்க மோதிரம் திட்டம் மூலம் அரசு ஆஸ்பத்திரிகளில் பிரசவம் அதிகரிக்கும். ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் பணியாளர்கள், பணம் கேட்டு இடையூறு கொடுத்தால் 104 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com