ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை வழக்கில் திருப்பம்: புதையல் ஆசை காட்டி பணத்தை திருடினோம் கைதான சாமியார் பரபரப்பு வாக்குமூலம்

ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை வழக்கில் திருப்பம்: புதையல் ஆசை காட்டி பணத்தை திருடினோம் கைதான சாமியார் பரபரப்பு வாக்குமூலம்
ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை வழக்கில் திருப்பம்: புதையல் ஆசை காட்டி பணத்தை திருடினோம் கைதான சாமியார் பரபரப்பு வாக்குமூலம்
Published on

பள்ளிபாளையம்:

ஜவுளிக்கடை அதிபர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் திடீர் திருப்பமாக புதையல் ஆசை காட்டி பணத்தை திருடியதாக கைதான சாமியார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சாமியார்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசம் பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். ஜவுளிக்கடை அதிபர். கடந்த 8-ந் தேதி இவருடைய தந்தை மணியண்ணன் வீட்டில் தனியாக இருந்தபோது அவரை கட்டிப்போட்டு வீட்டில் இருந்த ரூ.28 லட்சம், 18 பவுன் நகைகளை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து பிரகாஷ் பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 9-ந் தேதி 7 பேரும், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதனை தாடர்ந்து நேற்று முன்தினம் 4 பேரும், நேற்று மோகனூரில் அகத்தியன் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இ்ந்த நிலையில் கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் திருப்பூரில் பதுங்கி இருந்த சாமியார் ரமேசை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைதான சாமியார் ரமேஷ் கொள்ளை சம்பவம் குறித்து போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அந்தியூரை சேர்ந்த எனக்கு கோவிலுக்கு வந்தபோது பிரகாசின் தந்தையுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்போது நான் திருவண்ணாமலையில் தங்கி மாந்திரீகம், பூஜை செய்து புதையல் எடுத்து தருவதாகவும் தெரிவித்தேன்.

ரூ.8 லட்சம் பறிமுதல்

இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு மணியண்ணன் வீட்டுக்கு சென்றபோது ரூ.50 ஆயிரம் கொடுத்தால் பூஜை செய்து புதையல் எடுத்து தருவதாக கூறினேன். அதன்படி அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பூஜை போட்டு பள்ளம் தோண்டினேன். ஆனால் அங்கு புதையல் இல்லாததால் பேசிய ரூ.50 ஆயிரத்தை மணியண்ணன் காடுக்கவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த நான் பிரகாஷ் வீட்டு கார் டிரைவர் ராம்ராஜிடம் பண ஆசையை காட்டி மணியண்ணனின் வீட்டு நடைமுறைகளை தெரிந்து கொண்டேன்.

பின்னர் எனக்கு தெரிந்த நபர்கள் மூலம் பிரகாசின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டம் போட்டேன். அதன்படி கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாக வாக்குமூலத்தில் தெரிவித்தார். இதையடுத்து அந்த கும்பலிடம் இருந்து ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கொள்ளை வழக்கு தொடர்பாக மோகனூரில் கைது செய்யப்பட்ட அகத்தியனிடம் இருந்து மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சாமியார் ரமேசிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கார் டிரைவரை வசிய மை மூலம் வசப்படுத்திய சாமியார்

ஜவுளி அதிபர் வீட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சாமியார் ரமேஷ் நெற்றியில் திருநீறு வைத்ததும், அவர் சொல்வதை கேட்கும் மனநிலைக்கு வந்து விடுவார்களாம். அந்த அளவுக்கு திருநீறில் வசியம் கலந்து வைப்பதாக சொல்லப்படுகிறது. அதன்படி பிரகாஷ் வீட்டு டிரைவர் ராம்ராஜை தன் பேச்சிலேயே மயக்கி வசப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. பணம் இருக்கும் இடத்தை கூறினால் அதனை யார் கண்ணிலும் தெரியாமல் எடுத்து விடுவேன் என்று கூறியதன்பேரில் கார் டிரைவர் ராம்ராஜ் தகவல்களை தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com