8 பவுன் நகை, பணம் கொள்ளை

வேதாரண்யம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
8 பவுன் நகை, பணம் கொள்ளை
Published on

வேதாரண்யம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, பணத்தை  கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஆம்புலன்ஸ் டெக்னீசியன்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது37). இவர் 108 ஆம்புலன்சில் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய தம்பி பிரபாகரன். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இன்னும் 15 நாட்களில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்த திருமணத்துக்கு உறவினர்களுக்கு பத்திரிகை வைத்து அழைப்பதற்காக பிரகாஷ் மற்றும் குடும்பத்தினர் நேற்று முன்தினம் வெளியூர் சென்றிருந்தனர்.

நகைகள் கொள்ளை

நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது.

அதில் திருமணத்துக்காக வீட்டில் வைத்திருந்த 8 பவுன் நகைகள், ரூ.70 ஆயிரத்தை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்த கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

தடயவியல் சோதனை

இதை அறிந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

நாகையில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளை நடந்த வீட்டியல் தடயங்களை சேகரிக்கப்பட்டன. மேப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com