கோவையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை - போலீசார் விசாரணை

கொள்ளை சம்பவம் குறித்து கடையில் பணிபுரியும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை - போலீசார் விசாரணை
Published on

கோவை,

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் நேற்று நள்ளிரவில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொள்ளை சம்பவம் குறித்து காலையில்தான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காட்டூர் போலீசார் கடையில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளை போன நகைகளின் விவரம் தெரியாத நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகைக்கடையில் இருந்து சுமார் 100 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com