நெடுஞ்சாலையில் பைக்கில் செல்பவர்களிடம் வழிப்பறி கொள்ளை- வெளிவந்த அதிர்ச்சி தகவல்

சுங்கச்சாவடி பகுதிகளில் பைக்கில் வரும் நபர்களை குறிவைத்து தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 9 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
நெடுஞ்சாலையில் பைக்கில் செல்பவர்களிடம் வழிப்பறி கொள்ளை- வெளிவந்த அதிர்ச்சி தகவல்
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் வரும் நபர்களை குறிவைத்து மர்ம நபர்கள் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கும்பலை தனிப்படை அமைத்து பிடிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உத்தரவிட்டார். தொடர்ந்து, தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் சந்தேகப்படும்படி சுற்றித்திருந்த 21 வயது இளைஞர் சூர்யபிரகாஷ் மற்றும் ஜெயசந்திரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்17 வயது சிறுவன் உள்பட , தர்மராஜ், யோகேந்திரன், சியாம்சுந்தர் , முருகேசன், ஹரி, முஹமது பைசல் உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து 7 இருசக்கர வாகனம் மற்றும் 10 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இக்கும்பலுக்கு தொடர்புடைய 6 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com