பணகுடி அருகே டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை, பணம் கொள்ளை

பணகுடி அருகே, டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
பணகுடி அருகே டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை, பணம் கொள்ளை
Published on

பணகுடி:

பணகுடி அருகே, டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கார் டிரைவர்

நெல்லை மாவட்டம் பணகுடி அருகேயுள்ள தெற்கு பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கத்தாரில் கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர் சென்னையில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக 2 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் சென்றார்.

கொள்ளை

பின்னர் நேற்று காலை முருகன் சொந்த ஊருக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

வீட்டில் பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 28 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து முருகன் பணகுடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டனர். இந்த துணிகர கொள்ளை குறித்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com