நடந்து சென்றவரிடம் ரூ.10 ஆயிரம் வழிப்பறி

மதுரையில் நடந்து சென்றவரிடம் ரூ.10 ஆயிரம் வழிப்பறி செய்யப்பட்டது.
நடந்து சென்றவரிடம் ரூ.10 ஆயிரம் வழிப்பறி
Published on

மதுரை எம்.கே.புரம் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 43). இவர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி, பால்பாண்டியிடம் இருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com