பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து கத்திமுனையில் ரூ.40 லட்சம் கொள்ளை - கரூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

அரவக்குறிச்சி அடுத்த செங்காளிவலசு பகுதியை சேர்ந்த சிவஞானம் என்பவரது வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடத்திருக்கிறது.
பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து கத்திமுனையில் ரூ.40 லட்சம் கொள்ளை - கரூர் அருகே அதிர்ச்சி சம்பவம்
Published on

கரூர்,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே, பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், கத்தியை காட்டி மிரட்டி 40 லட்ச ரூபாய் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரவக்குறிச்சி அடுத்த செங்காளிவலசு பகுதியை சேர்ந்த சிவஞானம் என்பவரது வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் நடத்திருக்கிறது. பைனான்ஸ் தொழில் செய்து வரும் சிவஞானத்தின் வீட்டிற்குள், திருப்பூர் மாவட்டம் வெள்ளைக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக்கூறி கொள்ளையர்கள் புகுந்துள்ளனர்.

இதையடுத்து கத்தி முனையில் குடும்பத்தினரை மிரட்டி நான்கரை சவரன் நகை மற்றும் 40 லட்ச ரூபாயை திருடிச் சென்றதாக கூறப்படும் நிலையில், கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com