ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, இது திருமா காலம் - வன்னி அரசு

தவெக தலைவர் தொடர்ந்து இன்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கக்கோரி கவர்னரிடம் உரிமைக் கோரியுள்ளார்.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, இது திருமா காலம் - வன்னி அரசு
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து விஜய் இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள், விசிக மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றிடம் ஆதரவு கேட்டார். இந்த கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கக்கோரி ஆளுநரிடம் உரிமைக் கோரியுள்ளார் விஜய்.

விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி உயர் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது ஆட்சியில் பங்கு கேட்கலாம் என முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் வன்னி அரசு தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு, இது திருமா காலம்-இனி உயர்வோம் மேலும் மேலும்!

எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com