ரூட் தல சம்பவம் : மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்கள் சஸ்பெண்ட்

அரும்பாக்கத்தில் பேருந்திற்குள் பட்டாக்கத்தியுடன் மோதிய சம்பவம் தொடர்பாக 2 மாணவர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ரூட் தல சம்பவம் : மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்கள் சஸ்பெண்ட்
Published on

சென்னை

பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த மோதல் குறித்து கல்லூரி முதல்வர் அருள் மொழி செல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பட்டாக்கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். மாணவர்கள் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவதற்கு அவர்களது குடும்ப சூழலே காரணம். கல்லூரி வளாகத்திற்குள் கட்டுப்பாடான சூழல் நிலவுகிறது. ஆசிரியர்கள் மாணவர்களை கல்லூரி வளாகத்தில் கவனித்து வருகிறார்கள். அதற்காக ஆசிரியர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. பச்சையப்பன் கல்லூரி பெயரை களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால் அவர்கள் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும்.

மாணவர்கள் ஆயுதம் எடுத்து வருவதை தடுக்க காவல்துறையுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரிகளுக்கு எந்த மாணவரும் கத்தி போன்ற ஆயுதங்களை எடுத்து வருவதில்லை. மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாலும் கல்லூரிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாலும் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபடும் மாணவர்களை திருத்துவதற்கு மனநல ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com