செஞ்சி கோட்டைக்கு ரூ15 கோடியில் ரோப் கார் வசதி

செஞ்சி கோட்டைக்கு ரூ.15 கோடியில் ரோப் கார் வசதி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
செஞ்சி கோட்டைக்கு ரூ15 கோடியில் ரோப் கார் வசதி
Published on

செஞ்சி

செஞ்சி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, செயல் அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது செஞ்சிக்கோட்டையை சுற்றுலா மையமாக அறிவித்து வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்ற முதல்-அமைச்சரின் அறிவிப்பின்படியும், செஞ்சி சட்டமன்ற உறுப்பினரின் 10 அம்ச கோரிக்கையின் அடிப்படையிலும் செஞ்சி கோட்டைக்கு ரூ.15 கோடியே 80 லட்சம் மதிப்பில் ரோப் கார்(கம்பி வழி பாதை)படகு சவாரி, பேட்டரி கார் ஆகிய வசதிகளை செய்து கொடுப்பது, ரூ.3 கோடியே 30 லட்சம் மதிப்பில் தார் சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க சுற்றுலாத்துறை மற்றும் அரசுக்கு பரிந்துரை செய்வது, நகர்புற சாலை மேம்பாட்டு கட்டமைப்பு திட்டத்தின் மூலம் செஞ்சி பேரூராட்சி பகுதிகளில் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் பல்வேறு இடங்களில் தார் சாலை அமைப்பது, நவம்பர் 1-ந் தேதி உள்ளாட்சி தினமாக அறிவித்து அன்றைய தினம் கிராம ஊராட்சியை போல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த உத்தரவிட்ட தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஜான் பாஷா, கார்த்திக், சீனிவாசன், பொன்னம்பலம், மோகன், சிவகுமார், அகல்யா வேலு, சுமித்ராசங்கர், அஞ்சலை நெடுஞ்செழியன் உள்பட அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com