பழனி முருகன் மலைக்கோவிலில் ரோப்கார் சேவை தற்காலிக நிறுத்தம்..!

பழனி முருகன் மலைக்கோவிலில் ரோப்கார் சேவை தற்காலிகம் ஆக நிறுத்தப்பட்டுள்ளது.
பழனி முருகன் மலைக்கோவிலில் ரோப்கார் சேவை தற்காலிக நிறுத்தம்..!
Published on

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது.

மேலும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று வர ரோப்கார், மின் இழுவை ரெயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப்கார் உள்ளது.

இந்நிலையில் மலைக்கோவிலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் காரணத்தால் ரோப்கார் சேவை தற்காலிகம் ஆக நிறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் படிகள் மற்றும் யானை பாதை வழியாக மலைக்கோவிலுக்கு செல்ல கோவில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com