பழனி முருகன் கோவிலில் ரோப்கா சோதனை ஓட்டம்

ரோப்கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது.
பழனி முருகன் கோவிலில் ரோப்கா சோதனை ஓட்டம்
Published on

பழனி,

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமாக உள்ளன. மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் பக்தர்கள் எளிதில் சென்றுவர ரோப்கார், மின்இழுவை ரெயில் சேவைகள் உள்ளன. இதில் விரைவாக செல்வதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலரும் ரோப்காரையே விரும்புகின்றனர்.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரோப்கார் நிலையத்தில் மாதாந்திர மற்றும் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பராமரிப்பு பணி கடந்த மாதம் 7-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து ரோப்கார் பெட்டிகள், எந்திரங்கள், பற்சக்கரங்கள் உள்ளிட்டவை கழற்றப்பட்டு பராமரிப்பு பணி நடந்தது. கடந்த 5-ந்தேதி ரோப்காரில் புதிய 'சாப்ட்'டும், பின்பு கம்பிவடமும் பொருத்தப்பட்டது. வருடாந்திர பராமரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியதால், ரோப்காரில் பெட்டிகள் இணைக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று, பெட்டிகளில் தலா 250 கிலோ எடைக்கு கற்கள் வைத்து ரோப்காரை இயக்கி சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது அதன் இயக்கத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த சோதனை ஓட்டம் முடிந்த பின்பு, வல்லுனர்குழு ஆய்வு நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ரோப்கார் சேவை தொடங்கும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com