அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்கள்

தொண்டி பகுதியில் அழுகிய நிலையில் டால்பின்கள் கரை ஒதுங்கின.
அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்கள்
Published on

தொண்டி,

தொண்டி அருகே தாமோதரன்பட்டினம் கிராமத்தில் சுமார் 5 அடி நீளமும் 70 கிலோ எடை கொண்ட டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதேபோல் தொண்டி அருகே சோழியக்குடி பகுதியில் 4 அடி நீளமுள்ள 60 கிலோ எடை கொண்ட டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் 2 டால்பின்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்குப்பின் அப்பகுதியில் புதைத்தனர். இந்த 2 டால்பின்களுமே அழுகிய நிலையில் கரை ஒதுங்கியதால் ஆழ் கடல் பகுதியில் படகுகளில் மோதி இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். தொண்டி கடலோரப் பகுதியில் டால்பின் பற்றிய விழிப்புணர்வு மீனவர்கள் மத்தியில் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில் இது போன்று டால்பின்கள் இறந்து கரை ஒதுங்கி உள்ளது வனத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com