அழுகிய நிலையில் ஆண் பிணம்

சாத்தூர்-கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது
அழுகிய நிலையில் ஆண் பிணம்
Published on

சிவகாசி

சாத்தூர்-கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் உள்ள புல்வாய்பட்டி விலக்கு அருகில் பலத்த காயங்களுடன் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் சாத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவருக்கு சுமார் 45 வயது முதல் 50 வயது இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இவர் யார்? வாகன விபத்தில் இறந்தாரா? அல்லது முன்விரோதம் காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Daily Thanthi
www.dailythanthi.com