

கோவை,
கோவையில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்து வந்தது. அதனைத் தொடர்ந்து, குற்றவாளியை பொறி வைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர்.
போலீசார் விசாரணையில் இந்த தொடர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது ரவுடி பாலமுருகன் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, ரவுடி பாலமுருகனை போலீசார் தேடி வந்தனர்.
இன்று மாலை சூலூர் அருகே ரவுடி பாலமுருகனை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் முயன்றார். சுதாரித்து கொண்ட ரவுடி பாலமுருகன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சப்-இன்ஸ்பெக்டரை வெட்டினார்.
அதில், காயம் அடைந்த அவர், தற்காப்புக்காக துப்பாக்கியை எடுத்து ரவுடி பாலமுருகனின் வலது காலில் சுட்டார். காலில் காயம் ஏற்பட்ட நிலையில், ரவுடி பாலமுருகன் சுருண்டு விழுந்தார்.
அவரை பிடித்த போலீசார் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.