தூத்துக்குடியில் ஆயுதத்துடன் சுற்றித் திரிந்த ரவுடி கைது

தூத்துக்குடியில் இளைஞர் ஒருவர் கையில் ஆயுதத்துடன் சுற்றித் திரிந்து, அவ்வழியாகச் செல்லும் பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்துவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ரவுடி கைது.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்து பொதுமக்களை அச்சுறுத்திய ரவுடிப் பட்டியலில் உள்ள வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

போலீசாருக்கு தகவல்

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் நேற்று தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் இளைஞர் ஒருவர் கையில் ஆயுதத்துடன் சுற்றித் திரிந்து, அவ்வழியாகச் செல்லும் பொதுமக்களை மிரட்டி அச்சுறுத்துவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

கத்தியுடன் சுற்றித் திரிந்த ரவுடி

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பொதுமக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த முத்துமணி (வயது 19) என்பதும், இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர் என்பதும் தெரியவந்தது.

கைது

இதையடுத்து அவரிடமிருந்த கத்தியை பறிமுதல் செய்த போலீசார், முத்துமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com