

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டையில் ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேரை போலீசார் விரைந்து கைது செய்தனர்.
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எம்.கே.பி. நகர் பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளியான சாலமோன் சாம் பிரபாகர் (வயது 32) என்பவர் முன்பகையின் காரணமாக நேற்று 6 பேர் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை செய்துவிட்டு, தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாளையங்கோட்டை போலீசார் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நெல்லை மாநகர காவல் துறையினர் உடனடியாக விரைந்து செயல்பட்டு தப்பியோடிய கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட நபர்களான செல்லத்துரை மகன் மாரிமுத்து(எ) பட்டாணி (வயது 32), பாபு மகன் சுபாஷ்(32), சுடலைமணி மகன் மான்செல்வகுமார்(40), முருகன் மகன் மகாராஜன், முருகன் மகன் லிங்கதுரை(23) மற்றும் இளஞ்சிறார் ஒருவர் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேற்சொன்ன நபர்களில் மகாராஜன், லிங்கதுரை ஆகிய 2 பேர் தப்பி செல்ல முயன்றபோது கீழே விழுந்ததில் கையில் காயம் ஏற்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.