நெல்லையில் ரவுடி கொலை: போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றவர்களின் கை எலும்பு முறிவு

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மான் செல்வக்குமார் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
நெல்லையில் ரவுடி கொலை: போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றவர்களின் கை எலும்பு முறிவு
Published on: 

நெல்லை,

பாளையங்கோட்டையில் நடந்த ரவுடி கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது தப்பிக்க முயன்ற 2 பேரின் கை முறிந்தது.

ரவுடி கொலை

நெல்லை பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் டேவிட்ராஜன். இவருடைய மகன் சாலமன் சாம் பிரபாகர் (வயது 36). பிரபல ரவுடியான இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.

இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த போது. வெறிச்செயலில் ஈடுபட்டது அவரின் நண்பர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களை தேடி வந்தனர்.

2 பேருக்கு கை முறிவு

இந்த நிலையில் அவர்கள் ஓரிடத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு போலீசாரை பார்த்ததும் லிங்கம், மகாராஜன் ஆகியோர் தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது அவர்கள் தவறி விழுந்ததில் அவர்களின் கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை

இதனையடுத்து போலீசார் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வந்து பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களை கைது செய்து போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மான் செல்வக்குமார் என்பவரையும் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள்.

X