ரவுடி நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை முடிந்தது : உறவினர்களிடம் இன்று ஒப்படைப்பு

ஸ்டான்லி மருத்துவமனையில் ரவுடி நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை முடிந்தநிலையில், உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது.
ரவுடி நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை முடிந்தது : உறவினர்களிடம் இன்று ஒப்படைப்பு
Published on

பெரம்பூர்,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான பிரபல ரவுடி நாகேந்திரன், கல்லீரல் பாதிப்பால் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக புழல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாகேந்திரன் உடல் பிரேத பரிசோதனை செய்வது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது தங்கள் தரப்பில் ஒரு டாக்டரை அனுமதிக்க வேண்டும் என நாகேந்திரனின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். அதனை நீதிபதி சதீஷ்குமார் நிராகரித்தார். பின்னர் அவரது உத்தரவின்பேரில் மாதவரம் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு தீபா மேற்பார்வையில் டாக்டர் சாந்தகுமார் தலைமையில் ஸடான்லி மருத்துவ கல்லூரி தடயவியல் துறை தலைவர் பிரியதர்ஷினி, டாக்டர்கள் நாராயணன், ராஜேஷ் ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்து முடித்தனர்.

இதற்கிடையில் வியாசர்பாடி சத்யமூர்த்தி நகரில் உள்ள நாகேந்திரன் வீட்டில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். நாகேந்திரன் உடல் இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். குடும்பத்தினர் அஞ்சலிக்கு பிறகு மதியம் 2 மணிக்கு வியாசர்பாடி முல்லை நகர் சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்யப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com